Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

இந்திய தேசிய இயக்கம் - 6

51. தியோசாபிக்கல் சொஸைட்டி முதலில் உருவான நாடு

அ. இந்தியா
ஆ. அயர்லாந்து
இ. அமெரிக்கா
ஈ. இங்கிலாந்து
52. இராஸ்த் கோப்தார் என்பது

அ. சீர்திருத்த இயக்கம்
ஆ. பத்திரிகை
இ. சமூக சீர்திருத்தவாதியின் பெயர்
ஈ. நகரம்
53. இந்திய ஆயுத சட்டம் கொண்டு வந்தவர்

அ. கானிங் பிரபு
ஆ லிட்டன் பிரபு
இ. கர்சன் பிரபு
ஈ. ரிப்பன் பிரபு
54. ஹண்டர் கல்வி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு

அ. 1880
ஆ. 1881
இ. 1882
ஈ. 1883
55. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்ற காரணமான ஹுயூம் ஒரு

அ. ஆங்கிலேய பத்திரிகையாளர்
ஆ. ஆங்கில ஓய்வு பெற்ற அலுவலர்
இ. சீர்திருத்தவாதி
ஈ. ஆங்கில வைசிராய்
56. கீழ்க்கண்ட எது டச்சுக்காரர்களின் வாணிபத் தலம்?

1. பழவேற்காடு
2. மசூலிப்பட்டினம்
3. சின்சுரா

அ. அனைத்தும் சரியானவை
ஆ. 1 மற்றும் 2 சரியானவை
இ. 1 மற்றும் 3 சரியானவை
ஈ. 2 மற்றும் 3 சரியானவை
57. ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் ஆங்கிலேய வணிகத்தலம் அமைக்க அனுமதி பெற்றவர்?

அ. சர் வில்லியம் ஹாக்கின்ஸ்
ஆ. சர் தாமஸ் ரோ
இ. சர் பிரான்ஸிஸ் டே
ஈ. வில்லியம் ஹாமில்டன்
58. 1674ம் ஆண்டு பாண்டிச்சேரியை அமைத்தவர்

அ. டியூப்ளே
ஆ. டூமாஸ்
இ. பிரான்சிஸ் கரோன்
ஈ. பிரான்சிஸ் மார்டின்
59. கீழ்க்கண்ட எது கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது?

1. ஏனாம்
2. மாஹி
3. பாலாச்சூர்

அ. 1 மற்றும் 3
ஆ. 2 மற்றும் 3
இ. 1 மற்றும் 2
ஈ. அனைத்தும்
60. 1767ல் செங்கத்தில் ஹைதர் அலியை தோற்கடித்த ஆங்கிலேயர்?

அ. சர் அயர் கூட்
ஆ. வாட்சன்
இ. ஸ்மித்
ஈ. மேஜர் மன்றோ

விடை: 51. இ 52. ஆ 53. ஆ 54. ஆ 55. ஆ 56. அ 57. ஆ 58. ஈ 59. அ 60. இ

No comments:

Post a Comment