Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

இயற்பியல் - 1

1. ஒரு குதிரைத்திறன் என்பது

அ. 946 வாட்
ஆ. 846 வாட்
இ. 746 வாட்
ஈ. 646 வாட்
2. வௌவால் ஏற்படுத்துவது

அ. குற்றொலி
ஆ. மீயொலி
இ. செவி உணர் ஒலி
ஈ. அனைத்தும் தவறு
3. மனிதன் மற்றும் சில விலங்குகளின் ஒலி உணரும் திறனை (ஹெர்ட்ஸ்) பொருத்துக:

I. மனிதன் - 1. 1000 - 1,00,000
II. யானை - 2. 100 - 32,000
III. பூனை - 3. 20 - 20,000
IV. கொறி விலங்குகள் - 4. 16 - 12,000

அ. I-3 II-1 III-2 IV-4
ஆ. I-3 II-4 III-1 IV-2
இ. I-3 II-2 III-1 IV-4
ஈ. I-3 II-4 III-2 IV-1
4. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும்

அ. மாயபிம்பம்
ஆ. மெய்பிம்பம்
இ. பொய்பிம்பம்
ஈ. மாய மற்றும் மெய்பிம்பங்கள்
5. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்

அ. பரப்பு இழுவிசை
ஆ. ஈர்ப்பு விசை
இ. மைய நோக்கு விசை
ஈ. மைய விலக்கு விசை
6. முதன்மை நிறங்கள்

அ. சிவப்பு, பச்சை, நீலம்
ஆ. பச்சை, சிவப்பு, கருப்பு
இ. சிவப்பு, பச்சை, வெள்ளை
ஈ. கருப்பு, மஞ்சள், நீலம்
7. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம்

அ. காற்று
ஆ. ஆக்சிசன்
இ. நீர்
ஈ. சூரியன்
8. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை

அ. 9.9 N
ஆ. 9.10 N
இ. 9.8 N
ஈ. 9.11 N
9. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும்

அ. சமமாக இருக்கும்
ஆ. தண்ணீரின் அளவை பொறுத்து மாறுபடும்
இ. பாத்திரத்தின் அளவை சார்ந்து வேறுபடும்
ஈ. மேற்கூறிய எதுவும் சரியில்லை
10. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம்

அ. 20 கி.மீ.
ஆ. 18 கி.மீ.
இ. 25 கி.மீ.
ஈ. 30 கி.மீ.

விடை: 1. இ 2. ஆ 3. ஈ 4. அ 5. அ 6. அ 7. ஈ 8. இ 9. அ 10. ஆ

No comments:

Post a Comment