Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

புவியியல் - 6

51. திண்மையான பாறைகளை ஊடுருவி ஆற்றினால் உருவாக்கப்படும் ஆழமான செங்குத்து சரிவுடைய 'V' வடிவ பள்ளத்தாக்கு
அ. கென்யான்கள்
ஆ. வளைநெளிவுகள்
இ. பானைத்துளை
ஈ. சிதைந்த துமைகள்
52. ஏஞ்சல் நீர் வீழ்ச்சி உள்ள நாடு

அ. வெனிசுலா
ஆ. தென் ஆப்பிரிக்கா
இ. நியூசிலாந்து
ஈ. பிரிட்டன்
53. கடல் நீரின் நகர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ. அலை
ஆ. நீரோட்டம்
இ. பேரலை
ஈ. ஆழியலை மோதல்
54. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

அ. ஸோஜிவா - காஷ்மீர்
ஆ. ஷிப்கில்லா - இமாச்சல பிரதேசம்
இ. நாதுல்லா - சிக்கிம்
ஈ. ஜெலிப்லா - ஜார்கண்ட்
55. வரலாற்று காலத்தில் உருவான மடிப்பு மலைகள்

அ. ஆரவல்லி
ஆ. சாத்பூரா
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை
56. 'சகாயத்ரி' என்று குறிப்பிடப்படுவது

அ. மேற்கு தொடர்ச்சி மலையின் வடபகுதி
ஆ. மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதி
இ. விந்திய மலை
ஈ. கிழக்கு தொடர்ச்சி மலை
57. காதர் மற்றும் பாங்கர் என்பவை எதனோடு தொடர்புடையது?

அ. மணல்
ஆ. கரிசல் மண்
இ. வண்டல் மண்
ஈ. செம்மண்
58. காட்டிலாக்கா நிலங்களை குத்தகைக்கு எடுக்கும் ஏழை விவசாயிகள்

அ. பழங்குடியினர்
ஆ. குமரிதாரர்கள்
இ. ஒப்பந்ததாரர்கள்
ஈ. குறுநில விவசாயிகள்
59. கடக ரேகையால் பிரிக்கப்படாத மாநிலம்

அ. குஜராத்
ஆ. ராஜஸ்தான்
இ. பீகார்
ஈ. மேகாலயா
60. கீழ்க்கண்டவற்றுள் எவை ஏறக்குறைய ஒரே இடத்திலிருந்து தோன்றுபவை?

அ. கங்கை, சிந்து
ஆ. பியாஸ், தபதி
இ. கங்கை, பிரம்மபுத்ரா
ஈ. சிந்து, பிரம்மபுத்ரா

விடை: 51. அ 52. அ 53. ஆ 54. ஈ 55. ஆ 56. அ 57. இ 58. ஆ 59. இ 60. ஈ

No comments:

Post a Comment