Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

வரலாறு - 6

51. போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக நடப்பட்ட வீரகற்கள்

அ. பெருங்கல்
ஆ. நடுகல்
இ. வீரக்கல்
ஈ. கல்பாடிவீடு
52. முறையான எழுத்து முறை எதில் உருவானது?

அ. ஆரியர் காலம்
ஆ. சுமேரிய நாகரீகம்
இ. சிந்து சமவெளி நாகரீகம்
ஈ. எகிப்து நாகரீகம்
53. அலாவுதீன் கில்ஜியின் தந்தை

அ. கியாசுதீன்
ஆ. குத்புதீன்
இ. ஜலாலுதீன்
ஈ. நசுருதீன்
54. தோடர்மால் யாருடைய அவையிலிருந்த வருவாய் அமைச்சர்?

அ. ஜஹாங்கீர்
ஆ. அவுரங்கசீப்
இ. அக்பர்
ஈ. ஷாஜகான்
55. கீழ்க்கண்ட மன்னர்களை சரியான வரிசையில் எழுதுக

1. பெரோஷ் துக்ளக்
2. ஜலாலுதீன் கில்ஜி
3. பகலால் லோடி
4. சிக்கந்தர் லோடி
அ. 1, 2, 3, 4
ஆ. 2, 1, 3, 4
இ. 1, 2, 4, 3
ஈ. 2, 1, 4, 3
56. திரிபீடகங்கள் என்பது யாருடைய புனித நூல்?

அ. சமண மதம்
ஆ. புத்த மதம்
இ. இந்து மதம்
ஈ. கிறிஸ்தவ மதம்
57. கி.பி. 505 முதல் 587 வரையிலான காலத்தில் வாழ்ந்த மற்றும் விக்கிரமாதித்யன் அவையிலிருந்த வராகமித்திரர் ஒரு

அ. வானியல் நிபுணர்
ஆ. கணித மேதை
இ. தத்துவஞானி
ஈ. இவை அனைத்துமே
58. முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய ஆண்டு

அ. 1319
ஆ. 1327
இ. 1339
ஈ. 1345
59. வேத காலம் என்பது

அ. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை
ஆ. கி.மு. 1000 முதல் 500 வரை
இ. கி.மு. 500 முதல் 100 ஆண்டுகள்
ஈ. இவை எதுவும் இல்லை
60. முஸ்லிம் அல்லாதவரிடம் விதிக்கப்பட்ட ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அக்பர்
ஆ. ஜஹாங்கீர்
இ. அவுரங்கசீப்
ஈ. அலாவுதீன் கில்ஜி

விடை: 51. ஆ 52. ஆ 53. இ 54. இ 55. ஆ 56. ஆ 57. ஈ 58. ஆ 59. அ 60. ஈ

No comments:

Post a Comment