Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

வரலாறு - 7

61. அங்கோர்வாட் கலைக்கோவில்கள் எங்குள்ளன?

அ. பிலிப்பைன்ஸ்
ஆ. தாய்லாந்து
இ. கம்போடியா
ஈ. வியட்னாம்
62. தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆரிய சமாஜம் பற்றி எது சரி?

அ. உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டது
ஆ. இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து கொள்வதை ஆதரித்தது
இ. ஜாதி முறையை கண்டித்தது
ஈ. அவை அனைத்துமே சரி
63. இல்டுட் மிஷ் காலத்தில் எல்லை அபாயங்களை ஏற்படுத்தியவர்

அ. தைமூர்
ஆ. செங்கிஸ்கான்
இ. பெரோஷ் துக்ளக்
ஈ. அனைவரும்
64. முகமதுகோரி கஜினியைக் கைப்பற்றிய ஆண்டு

அ. 1173
ஆ. 1174
இ. 1175
ஈ. 1176
65. பின்வருவனவற்றில் ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?

அ. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்
ஆ. மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்
இ. இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்
ஈ. இவை அனைத்துமே சரி
66. அசோக சக்கரவர்த்தியைப் பற்றி எது சரியான கூற்று?

அ. கி.மு. 269 முதல் 232 வரை ஆட்சி புரிந்தார்
ஆ. கலிங்கப் போருக்குப் பின் போரை வெறுத்து புத்த மதத்தைத் தழுவினார்
இ. இவரது மறைவுக்குப் பின் மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது
ஈ. இவை அனைத்தும் சரி
67. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?

அ. அசோகர்
ஆ. சிவாஜி
இ. கனிஷ்கர்
ஈ. சந்திரகுப்தர்
68. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

அ. ராமகிருஷ்ண பரமஹம்சர்
ஆ. மகாவீரர்
இ. கௌதம புத்தர்
ஈ. விவேகானந்தர்
69. சஸ்ருதா என்னும் நூல் எதோடு தொடர்புடையது?

அ. நிலவரி
ஆ. அரசின் வருமான வரி
இ. வானியல்
ஈ. மருத்துவம்
70. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு என்ன?

அ. தஞ்சாவூர் கோயிலை கட்டிய சோழர் கால கலை
ஆ. கிராம சுயாட்சி
இ. சிறப்பான உள்ளாட்சி முறை
ஈ. இவை அனைத்துமே

விடை: 61. இ 62. ஈ 63. ஆ 64. அ 65. ஈ 66. ஈ 67. ஆ 68. இ 69. ஈ 70. ஈ

No comments:

Post a Comment