Popular Posts

Wednesday 7 March 2012

general knowledge

வரலாறு - 16

151. மெகஸ்தனிஸ் எழுதிய வரலாற்று படைப்பு

அ. இண்டிகா
ஆ. அர்த்த சாஸ்திரம்
இ. குஜராத் வரலாறு
ஈ. அனைத்தும்
152. சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு

அ. யானை
ஆ. மாடு
இ. குதிரை
ஈ. மான்
153. அலெக்சாண்டரின் நண்பர்

அ. செலியூகஸ் நிகேடர்
ஆ. அரிஸ்டாடில்
இ. நியர்சஸ்
ஈ. பிலிஃப்
154. பொருத்துக:

I. பத்ரபாகு - 1. கலிங்க அரசன்
II. சசாங்கன் - 2. சமணத் துறவி
III. பிரகதத்தன் - 3. மௌரிய அரசன்
IV. விசாகத்தன் - 4. முத்ரா ராட்சசம்

அ. I-1, II-2, III-3, IV-4
ஆ. I-1, II-3, III-2, IV-4
இ. I-2, II-1, III-4, IV-3
ஈ. I-2, II-1, III-3, IV-4
155. சமண மதம் எந்த 2 பிரிவுகளாகப் பிரிந்தது?

அ. ஹீனயானம், மகாயானம்
ஆ. தெரவாடின், ஷின்டோ
இ. திகம்பர், ஸ்வேதாம்பர்
ஈ. மகாசங்கிகர், வஜ்ரயானர்
156. மௌரியக் கலையின் சிறப்பம்சம் என்ன?

அ. பூக்கள் வடிவம்
ஆ. விலங்கள் வடிவம்
இ. கடவுளின் உருவங்கள்
ஈ. தூண்கள்
157. மௌரியக் கட்டடங்கள் மற்றும் சிற்பங்களுக்கான கல் எங்கிருந்து வந்தது?

அ. ஜெய்பூர்
ஆ. தென்னிந்தியா
இ. இந்தியாவிற்கு வெளியிலிருந்து
ஈ. சுணார்
158. ஹைடஸ்பஸ் என்னும் நதிக்கரையில் அலெக்ஸாண்டர் போரஸ் மன்னரை தோற்கடித்தார். இந்த ஹைடஸ்பஸ் என்பது பஞ்சாபின் எந்த நதியைக் குறிக்கிறது?

அ. ஜீலம்
ஆ. சட்லஜ்
இ. பியாஸ்
ஈ. சீனாப்
159. குப்த பேரரசை நிறுவியவர் யார்?

அ. ஸ்ரீகுப்தர்
ஆ. கடோகசர்
இ. முதலாம் சந்திரகுப்தர்
ஈ. சமுத்திரகுப்தர்
160. விக்கிரமாதித்யர் என்னும் பட்டம் யாருக்குத் தரப்பட்டது?

அ. இரண்டாம் சந்திரகுப்தர்
ஆ. முதலாம் சந்திரகுப்தர்
இ. கடோகசர்
ஈ. ஸ்கந்தகுப்தர்

விடை: 151. அ 152. ஈ 153. இ 154. 155. இ 156. ஆ 157. இ 158. அ 159. அ 160. அ

No comments:

Post a Comment