Popular Posts

Wednesday 7 March 2012

general knowledge

வரலாறு - 20

191. சமுத்திர குப்தரை இந்திய நெப்போலியன் என்று வர்ணித்தவர்

அ. ஜான் மார்ஷல்
ஆ. டாக்டர் ஸ்மித்
இ. ஆர்.டி. பானர்ஜி
ஈ. டாக்டர். பி. மங்கள முருகேசன்
192. சேர அரசர்களைப் பற்றி கூறும் நூல்

அ. மூவருலா
ஆ. பதிற்று பத்து
இ. புறநானூறு
ஈ. பரிபாடல்
193. 'அவனி சுந்தரி' கதையை எழுதியவர்

அ. கல்கி
ஆ. பரஞ்சோதி
இ. யுவான்சுவாங்
ஈ. தண்டின்
194. ராஜபுத்திரர்களின் ஒரு பிரிவான பிரதிகாரர்கள் மரபை தோற்றுவித்தவர்

அ. மகேந்திரபாலன்
ஆ. நாகப்பட்டர்
இ. விசால் தேவர்
ஈ. பிரிதிவி ராசன்
195. ராஜேந்திர சோழனால் கங்கை கரையில் தோற்கடிக்கப்பட்டவர்

அ. தர்மபாலன்
ஆ. கோபாலன்
இ. மகிபாலன்
ஈ. உபேந்திரர்
196. கஜினியால் தாக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தின் அமைவிடம்

அ. தில்வாரா
ஆ. சித்தோர்கர்
இ. கத்தியவார்
ஈ. புவனேஸ்வரம்
197. கஜினி முகம்மதுவின் இந்தியாவில் கடைசி படையெடுப்பு

அ. மதுரா
ஆ. கலிஞ்சார்
இ. சோமநாதபுரம்
ஈ. தானேஸ்வரம்
198. ராஜபுத்திரர்களின் ஒரு பிரிவான சந்தேல மரபின் கடைசி அரசனை தோற்கடித்தவர்

அ. கஜினி முகமது
ஆ. கோரி முகமது
இ. குத்புதீன் அய்பெக்
ஈ. சபக்டிஜின்
199. ராஜபுத்ர மன்னர்கள் போரில் இறந்தால் அல்லது தோல்வியடைந்தால் அரச குடும்பத்து பெண்கள் தீக்குளித்து இறந்து விடுவர். இந்நிகழ்வு கீழ்க்கண்டவாறு அழைக்கப்பட்டது.

அ. சதி
ஆ. ஜவ்ஹர்
இ. விலாவித்
ஈ. எதுவுமில்லை
200. ராஜசேகரர் எழுதிய நூல்

அ. பால ராமாயணம்
ஆ. பாலபாரதம்
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை

விடை: 191. ஆ 192. ஆ 193. ஈ 194. ஆ 195. இ 196. இ 197. ஈ 198. இ 199. ஆ 200. ஆ

No comments:

Post a Comment