Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

31. மத்திய அரசின் ஊழியர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக் காலம் என்ன?

அ. 5 ஆண்டுகள்
ஆ. 10 ஆண்டுகள்
இ. 4 ஆண்டுகள்
ஈ. 6 ஆண்டுகள்

32. லோக் சபாவில் அதிக பட்சமாக எத்தனை உறுப்பினர்கள் இருக்க முடியும்?

அ. 250
ஆ. 245
இ. 525
ஈ. 545
33. நமது தேசியக் கொடி எப்போதிருந்து நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது?

அ. ஜூலை 22, 1947
ஆ. ஆகஸ்ட் 14, 1947
இ. ஆகஸ்ட் 15, 1947
ஈ. ஜனவரி 26, 1948
34. பஞ்சாப் மாநிலம் மொழிவாரியாக எந்த ஆண்டு ஹரியானா மற்றும் சண்டிகார் யூனியன் பிரதேசமாக சீரமைக்கப்பட்டது?

அ. 1966
ஆ. 1969
இ. 1971
ஈ. 1947
35. இந்தியை நமது அதிகாரபூர்வமான மொழியாக எந்த அரசியலமைப்புப் பிரிவு உறுதி செய்கிறது?

அ. 343வது பிரிவு
ஆ. 344வது பிரிவு
இ. இரண்டுமே
ஈ. இரண்டும் அல்ல
36. கட்சி மாறல் தடைச் சட்டம் எந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தால் தடை செய்யப்படுகிறது?

அ. 51வது திருத்தம்
ஆ. 52வது திருத்தம்
இ. 53வது திருத்தம்
ஈ. இவை எதுவுமல்ல
37. அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தப் பிரிவு திருத்தம் பற்றி கூறுகிறது?

அ. 365
ஆ. 356
இ. 368
ஈ. இவை எதுவுமில்லை
38. யூனியன் லிஸ்ட் எனப்படும் மத்திய அரசின் துறைகளில் எத்தனை பட்டியலிடப்பட்டுள்ளன?

அ. 100
ஆ. 107
இ. 97
ஈ. இவை எதுவும் இல்லை
39. அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட

அ. அந்த மசோதா இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
ஆ. தனித்தனியாக இரு அவைகளிலும் மெஜாரிட்டி உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்
இ. இந்த இரண்டும் சரியல்ல
ஈ. இந்த இரண்டும் சரி
40. ஐ.நா. எப்போது முறையாக நடைமுறைக்கு வந்தது?

அ. பிப்ரவரி 1945
ஆ. ஜூன் 1945
இ. ஆகஸ்ட் 1945
ஈ. அக்டோபர் 1945
விடை: 31. ஈ 32. ஈ 33. அ 34. அ 35. இ 36. ஆ 37. இ 38. இ 39. ஈ 40. ஈ

No comments:

Post a Comment