Popular Posts

Wednesday 7 March 2012

general knowledge

வரலாறு - 18

171. கூற்று (A): இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார்.
காரணம் (R): இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.

அ. (A) மற்றும் (R) சரியானவை. (R)(A)வுக்கு சரியான விளக்கம்
ஆ. (A) மற்றும் (R) சரியானவை. (A)வுக்கு (R) சரியான விளக்கம் அல்ல
இ. (A) சரி (R) தவறு
ஈ. (A) தவறு (R) சரி
172. ஹர்ஷர் தானேஸ்வரத்தின் மன்னனாக பதவியேற ஆண்டு

அ. கி.பி. 606
ஆ. கி.பி. 608
இ. கி.பி. 609
ஈ. கி.பி. 611
173. ஹர்ஷர் மரணமடைந்த ஆண்டு

அ. கி.பி. 619
ஆ. கி.பி. 637
இ. கி.பி. 647
ஈ. கி.பி. 657
174. இரண்டாம் புலிகேசி ஈரான் நாட்டுத் தூதுவரை வரவேற்கும் காட்சி ஓவியமாக செதுக்கப்பட்டுள்ள இடம்

அ. அஜந்தா
ஆ. எல்லோரா
இ. பாதாமி
ஈ. அய்ஹோலி
175. இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்ட ஆண்டு

அ. கி.பி. 642
ஆ. கி.பி. 753
இ. கி.பி. 755
ஈ. கி.பி. 767
176. ராஷ்டிர கூடர்களில் சிறந்த அரசர்

அ. தண்டி துர்கா
ஆ. மூன்றாம் கோவிந்தர்
இ. சிம்ம விஷ்ணு
ஈ. ஜெயவர்தனன்
177. பிரயாகை நதிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசர்

அ. இரண்டாம் புலிகேசி
ஆ. ஹர்ஷவர்த்தனர்
இ. மூன்றாம் கோவிந்தர்
ஈ. அனைவரும்
178. 'சியூக்கி' என்னும் நூலை எழுதியவர்

அ. தர்மபாலர்
ஆ. ஹரிசேனர்
இ. யுவான் சுவாங்
ஈ. பாஹியான்
179. 'மகிபாலர்' என்பவர்

அ. கன்னோசி அரசன்
ஆ. வங்காள அரசன்
இ. ஹர்ஷரின் தளபதி
ஈ. மாளவ அரசன்
180. பொருத்துக:

I. அடவி ராஜ்யம் - 1. காடுகள் நிறைந்த நாடு
II. விஷ்ணுகோயில் - 2. தியோகர்
III. மெகரலி - 3. பல்கலைக்கழகம்
IV. உஜ்ஜயினி - 4. இரும்புத்தூள்

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-1 II-2 III-4 IV-3
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3

விடை: 171. இ 172. 606 173. இ 174. அ 175. அ 176. ஆ 177. ஆ 178. இ 179. ஆ 180. ஆ

No comments:

Post a Comment