Popular Posts

Wednesday 7 March 2012

general knowledge

வரலாறு - 19

181. சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதை கண்டறிக.

அ. பிரித்திவிராசன் - சவுகான்
ஆ. ஜெயசந்திரன் - கஜினி நகர்
இ. ஷாநாமா - அபுபாஸல்
ஈ. தில்வாரா - ஆக்ரா
182. 'பதஞ்சலி' என்பவர்

அ. கன்வர்களின் படைத்தளபதி
ஆ. கலிக மரபின் அரசர்
இ. ஒரு சமஸ்கிருத இலக்கண வல்லுனர்
ஈ. பாலி மொழியில் புத்தகத்தை பரப்பியவர்
183. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது.

1. அசுவகோஷர் - மகாவிபாஷம்
2. காளிதாசர் - மாளவி காக்கினி மித்ரம்
3. விசாகதத்தர் - முத்ரா ராக்டியம்

அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 2 மற்றும் 3
ஈ. 1 மற்றும் 3
184. சுங்கர்களின் லட்சியமாக இருந்தது

அ. புத்த மதத்தை உலகெங்கும் பரப்புதல்
ஆ. வேத மதமான இந்து மதத்தை பரப்புதல்
இ. இலக்கியப் பணிகளில் முத்திரைப் பதித்தல்
ஈ. கட்டிடக் கலையில் சாதனை
185. சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு

அ. கி.பி. 72
ஆ. கி.பி. 120
இ. கி.பி. 78
ஈ. கி.பி. 90
186. கீழ்க்கண்டவற்றில் தவறான தகவல்

1. மகாயானத்தில் புத்தர் கடவுளாக கருதப்படுகிறார்
2. மகாயானம் சமஸ்கிருதத்தில் பரப்பப்பட்டது
3. மகாயானம் ஹர்ஷரால் பின்பற்றப்பட்டது

அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 3 மட்டும்
ஈ. எதுவுமில்லை
187. கீழ்க்கண்டவற்றில் இந்தியாவில் உள்ள சிந்துவெளி நாகரீக நகரம்

1. ரூபர்
2. லோத்தல்
3. மொஹஞ்சதாரோ

அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 1 மற்றும் 3
ஈ. 2 மற்றும் 3
188. ஹரப்பா நாகரீகத்தில் இருந்த துறைமுக நகர்

அ. மொகஞ்சதாரோ
ஆ. ரூபர்
இ. காலிபங்கன்
ஈ. லோத்தல்
189. சுசுருசமிதம் எழுதிய சுசுருதர் கீழ்க்கண்ட யார் காலத்தைச் சார்ந்தவர்

அ. கனிஷ்கர்
ஆ. ஹர்ஷர்
இ. இரண்டாம் சந்திர குப்தா
ஈ. அனைவர் காலத்திலும் வாழ்ந்தவர்
190. சாத வாகனர்கள் ஆண்ட பகுதி

அ. இந்தியாவின் வடமேற்கு பகுதி
ஆ. இந்தியாவின் வடகிழக்குப் பகுதி
இ. கங்கைச் சமவெளி மற்றும் சம்பல் பள்ளத்தாக்கு
ஈ. கிருஷ்ணா-கோதாவரி ஆறுகளுக்கு இடையில்

விடை: 181. அ 182. இ 183. இ 184. ஆ 185. இ 186. ஈ 187. ஆ 188. ஈ 189. அ 190. ஈ

No comments:

Post a Comment