Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

புவியியல் - 10

91. வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா ஆறு எப்படி அழைக்கப்படுகிறது?

அ. அஜய்
ஆ. பத்மா
இ. ஜமுனா, மேக்னா
ஈ. பிராமனி
92. பனிக்காலத்தில் பஞ்சாப் எதன் மூலமாக மழையைப் பெறுகிறது?

அ. வட கிழக்கு பருவக்காற்று
ஆ. தென் மேற்கு பருவக்காற்று
இ. மத்திய தரைக் கடல் மற்றும் ஈரான் வளைகுடாவிலிருந்து வரும் புயல்காற்று
ஈ. திரும்ப வரும் பருவக்காற்று
93. தென்னிந்தியாவின் மிக அதிக வெப்பமான மாதம் எது?

அ. மே
ஆ. ஜூன்
இ. ஏப்ரல்
ஈ. ஜூலை
94. ஒட்டு மொத்த இந்தியாவின் ஆண்டு சராசரி மழையளவு என்ன?

அ. 120 செ.மீ.
ஆ. 180 செ.மீ.
இ. 105 செ.மீ.
ஈ. 70 செ.மீ.
95. வட கிழக்கு பருவகாலத்தில் மழை பெறும் பகுதி எது?

அ. அசாம்
ஆ. கேரளா
இ. மே. வங்கம்
ஈ. தமிழகம்
96. தக்காண பீடபூமியில் 2 நதிகளுக்கு இணை கோடாக அமைந்துள்ள மலை எது?

அ. நீலகிரி
ஆ. சாத்புரா
இ. மகாதேவ்
ஈ. விந்தியன்மலை
97. தீபகற்ப இந்தியாவின் உயரமான சிகரம் எது?

அ. நந்தா தேவி
ஆ. எவரெஸ்ட்
இ. ஆனைமுடி
ஈ. தௌலகிரி
98. அமைதி நதியின் பள்ளத்தாக்கு எங்கிருக்கிறது?

அ. பிரேசில்
ஆ. கனடா
இ. அர்ஜெண்டினா
ஈ. மெக்சிகோ
99. மனித நாகரிகத்தின் தொடக்க காலத்தில் அரிசி உற்பத்தி செய்த பகுதி எது?
அ. சீனா
ஆ. இந்தோனேசியா
இ. இந்தியா
ஈ. பிரேசில்
100. கடினமான கோதுமை எது செய்ய உதவுகிறது?

அ. பிரெட்
ஆ. கேக்
இ. பிஸ்கட்
ஈ. பேஸ்ட்

விடை: 91. இ 92. இ 93. அ 94. இ 95. ஈ 96. ஆ 97. இ 98. ஆ 99. அ 100. அ

No comments:

Post a Comment