Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

11. அடிப்படை உரிமைகள் என்பது எந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன?

அ. பிரிட்டன்
ஆ. பிரான்ஸ்
இ. அமெரிக்கா
ஈ. சீனா

12. எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நமது பாராளுமன்ற முறை வடிவமைக்கப்பட்டுள்ளது?

அ. பிரிட்டன்
ஆ. பிரான்ஸ்
இ. அமெரிக்கா
ஈ. சீனா
13. அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுவுக்கு தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நியமிக்கப்பட்ட போது அவர் எந்த அமைச்சராக இருந்தார்?

அ. உள்துறை
ஆ. வெளியுறவுத் துறை
இ. சட்டம்
ஈ. பாதுகாப்பு
14. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டத்திற்கு புறம்பானது?

அ. 22வது பிரிவு
ஆ. 24வது பிரிவு
இ. 21வது பிரிவு
ஈ. 27வது பிரிவு
15. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு எஸ்.சி., எஸ்.டி., மற்றும் நலிவடைந்தோருக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது?

அ. 41வது பிரிவு
ஆ. 46வது பிரிவு
இ. 40வது பிரிவு
ஈ. 50வது பிரிவு
16. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் எத்தனை தடவை ஜனாதிபதியாக முடியும்?

அ. 2
ஆ. 1
இ. 3
ஈ. வரையறை இல்லை
17. நிதி மசோதாவை எங்கு தாக்கல் செய்யலாம்?

அ. லோக் சபா
ஆ. ராஜ்ய சபா
இ. இரண்டிலும்
ஈ. இவை எதிலும் இல்லை
18. ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு பின்வருவனவற்றில் எது தேவைப்படும் தகுதி?

அ. குறைந்தது 35வது நிரம்பியவராக இருக்க வேண்டும்
ஆ. லோக் சபா எம்.பி. பதவிக்கு போட்டியிடும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்
இ. இந்தியராக இருக்க வேண்டும்
ஈ. இவை அனைத்துமே
19. லோக் சபா எம்.பி.க்களின் எண்ணிக்கையை எந்த ஆண்டு வரை மாற்ற முடியாது?

அ. 2008
ஆ. 2009
இ. 2010
ஈ. 2026
20. இந்திய குடியுரிமையை வரையறுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது ஆகிய உரிமைகள் யாரிடம் உள்ளது?

அ. மத்திய அமைச்சரவை
ஆ. பாராளுமன்றம்
இ. உச்ச நீதிமன்றம்
ஈ. சட்ட கமிஷன்

விடை: 11. இ 12. அ 13. இ 14. ஆ 15. ஆ 16. ஈ 17. அ 18. ஈ 19. ஈ 20. ஆ

No comments:

Post a Comment