Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

புவியியல் - 5

41. பீட், பிட்டுமோனஸ், ஆந்திரசைட் மற்றும் லிக்னைட் ஆகியவை எதோடு தொடர்புடையவை?

அ. இரும்பு
ஆ. மாங்கனீஸ்
இ. நிலக்கரி
ஈ. அலுமினியம்
42. கொடோபாக்சி எரிமலை எந்த நாட்டில் உள்ளது?

அ. பிரிட்டன்
ஆ. ஈகுவேடார்
இ. எகிப்து
ஈ. நியூசிலாந்து
43. ஜிப்ரால்டர் வளைகுடா அட்லாண்டிக் பெருங்கடலை எதோடு இணைக்கிறது?

அ. பசிபிக் பெருங்கடல்
ஆ. மத்திய தரைக்கடல்
இ. ஸ்பெயின்
ஈ. இவை எதுவுமல்ல
44. டைனோசர் முட்டைகள் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட கோபி பாலைவனம் எங்குள்ளது?

அ. ராஜஸ்தான்
ஆ. ஆப்கானிஸ்தான்
இ. பாகிஸ்தான்
ஈ. மங்கோலியா
45. ஷாராவதி நதிக்கரையில் அமைந்துள்ள ஜோக் நீர்வீழ்ச்சி தான் இந்தியாவிலேயே மிக உயரத்திலுள்ள நீர்வீழ்ச்சி. இது எந்த மாநிலத்திலுள்ளது?

அ. கேரளா
ஆ. கர்நாடகா
இ. ராஜஸ்தான்
ஈ. ஆந்திரபிரதேசம்
46. சந்திரன் பூமியைச் சுற்றி வர எத்தனை நாட்கள் ஆகும்?

அ. 30
ஆ. 29
இ. 27
ஈ. 25
47. கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்தியாவில் எங்கு சந்திக்கின்றன?

அ. இமயமலை
ஆ. திரிபுரா
இ. நீலகிரி
ஈ. ஆனைமலை
48. உள்நாட்டு மொழிகள் என இந்தி, தெலுங்கு, தமிழ், குஜராத்தி, உருது ஆகியவற்றை அங்கீகரித்துள்ள நாடு எது?

அ. கென்யா
ஆ. தென் ஆப்பிரிக்கா
இ. உகாண்டா
ஈ. பிஜி
49. மெசபடோமியா என்பது எதன் பழைய பெயர்?

அ. ஈரான்
ஆ. ஈராக்
இ. ஓமன்
ஈ. சிரியா
50. பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானுடன் இணைப்பது எது?
அ. லே கணவாய்
ஆ. கைபர் போலன் கணவாய்
இ. கோயத் கணவாய்
ஈ. ஹயல் கணவாய்

விடை: 41. இ 42. ஆ 43. ஆ 44. ஈ 45. ஆ 46. இ 47. இ 48. ஆ 49. ஆ 50. ஆ

No comments:

Post a Comment