Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

கலாச்சாரம் - 1

1. உகாதி பண்டிகை எங்கு கொண்டாடப்படுகிறது?

அ. தமிழகம்
ஆ. ஆந்திரா
இ. கர்நாடகா
ஈ. கேரளா
2. என். ராஜம் எதோடு தொடர்புடையவர்?

அ. நடனம்
ஆ. ஓவியம்
இ. வயலின்
ஈ. கர்னாடக இசை
3. பின் வருவனவற்றில் எது தொன்மையான நடன வடிவம்?

அ. வாங்லா
ஆ. கல்பேலியா
இ. ஒடிசி
ஈ. பண்டவணி
4. பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் ஐரோப்பியர் யார்?

அ. சர் அலெக்ஸாண்டர் கன்னிங்காம்
ஆ. வில்லியம் ஜோன்ஸ்
இ. சார்லஸ் வில்கின்ஸ்
ஈ. ஜேம்ஸ் பன்செப்
5. ராஜஸ்தானின் நடனம் எது?

அ. கார்பா
ஆ. குமர்
இ. ஜமர்
ஈ. நௌதங்கி
6. கீத் கோவிந்தம் புத்தகத்தை எழுதியவர் யார்?

அ. ஜெய்தேவர்
ஆ. மீரா
இ. உமபதி தர்
ஈ. தோலி
7. சரங்க் என்பது எந்த நேரத்தில் பாடப்படும் ராகம்?

அ. நள்ளிரவு
ஆ. காலை
இ. மதியம்
ஈ. மாலை
8. இந்தியாவின் முதல் சமஸ்கிருத மொழி திரைப்படம் எது?

அ. மாயா மிருகா
ஆ. ஹரிச்சந்திரா
இ. ஆதி சங்கராச்சாரியா
ஈ. கந்தகார்
9. தங்கமும் செல்வமும் குவிந்திருப்பதாக மேலை நாடுகளில் கற்பனையில் உருவாக்கப்பட்ட நாட்டின் பெயர் என்ன?

அ. உடோபியா
ஆ. ஒயாசிஸ்
இ. எல்டராடோ
ஈ. இவை அனைத்தும்
10. இறந்தவர்களுக்காக பாடப்படும் ஆங்கில இலக்கிய வடிவம் என்ன?

அ. எலிஜி
ஆ. பாலட்
இ. ஹைபர்போல்
ஈ. ஓட்

விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. ஆ 6. அ 7. ஆ 8. இ 9. இ 10. அ

No comments:

Post a Comment