Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

புவியியல் - 12

111. மெனோ என்பது எதன் உயர் ரக இனம்?

அ. பசு
ஆ. எருமை
இ. வெள்ளாடு
ஈ. செம்மறி ஆடு
112. கூற்று: (A) நீர் பகுதியைக் காட்டிலும் நிலப்பகுதி விரைவில் வெப்பத்தை எடுத்துக் கொள்ளும்.

காரணம்: (R) நீருக்கு நிலத்தைவிட வெப்ப ஏற்புத்திறன் அதிகம்.

அ. கூற்றும் காரணமும் சரியானவை. Aக்கு R சரியான விளக்கமாகும்
ஆ. A மற்றும் R சரியானவை. Aக்கு R சரியான விளக்கமல்ல
இ. A சரி R தவறு
ஈ. A மற்றும் R இரண்டும் தவறானவை
113. உலகின் மிகப்பெரிய பனியாறான மலாஸ்பீனாவின் அமைவிடம்

அ. யாகூட் வளைகுடா (அலாஸ்கா)
ஆ. பவளக்கடல் (ஆஸ்திரேலியா)
இ. மெக்ஸிகோ வளைகுடா
ஈ. தென் சீனக்கடல்
114. கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருத்தப்படாத இணை எது?

அ. கரக்கோட்டா - ஜாவா
ஆ. செயின்ட் ஹெலன் - வாஷிங்டன்
இ. பிராக்யூடின் - மெக்ஸிகோ
ஈ. மாயான் - ஜப்பான்
115. ஒரு தீவை அதன் முதன்மை நிலத்தோடோ அல்லது வேறு தீவோடோ இணைக்கும் மணல் தொடர்

அ. மணல் திட்டு
ஆ. ஓங்கல்
இ. டெம்போலா
ஈ. அலை அரிமேடை
116. சர்க்குகளில் பனியாறு உருவாவதால் உருவாகும் ஏரி

அ. ஆரெட்டுகள்
ஆ. டார்ன்
இ. பக்க மெரைன்கள்
ஈ. எதுவுமில்லை
117. இதுவரை கண்டறியப்பட்டுள்ள நிலப்பலகைகள்

அ. 6
ஆ. 10
இ. 12
ஈ. 8
118. பியாஸ் நதி எந்த மாநிலங்கள் வழியாகப் பாய்கிறது
அ. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான்
ஆ. பஞ்சாப், ஹரியானா, ஜம்மு
இ. பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம்
ஈ. பஞ்சாப், ஹரியானா
119. சகாயத்ரி என்று குறிப்பிடப்படுவது

அ. மேற்கு தொடர்ச்சி மலையின் வடபகுதி
ஆ. மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதி
இ. விந்திய மலை
ஈ. கிழக்கு தொடர்ச்சி மலை
120. ஜெயந்தியா, காசி மற்றும் காரோ குன்றுகள் அமைந்துள்ள பகுதி

அ. மேற்கு இமாலயத் தொடர்
ஆ. மத்திய இமாலயத் தொடர்
இ. கிழக்கு இமாலயத் தொடர்
ஈ. சிவாலிக் தொடர்

விடை: 111. ஈ 112. அ 113. அ 114. ஈ 115. இ 116. ஆ 117. இ 118. இ 119. அ 120. இ

No comments:

Post a Comment