Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

புவியியல் - 4

31. ஐராவதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் எது?

அ. பாங்காக்
ஆ. ஹனோய்
இ. மணிலா
ஈ. மாண்ட்லே
32. சபர்மதி ஆறு எங்கு ஓடுகிறது?

அ. கேப்டவுண்
ஆ. இஸ்லாமாபாத்
இ. ஆமதாபாத்
ஈ. தில்லி
33. பின்வரும் வாயுக்களில் எது வளி மண்டலத்தில் இல்லை?

அ. ஆர்கான்
ஆ. கிரிப்டான்
இ. ரேடான்
ஈ. செனான்
34. டிகோ கார்சியா தீவுகள் எங்குள்ளன?

அ. அரபிக் கடல்
ஆ. பசிபிக் கடல்
இ. இந்தியப் பெருங்கடல்
ஈ. அட்லாண்டிக் கடல்
35. அட்லாண்டிக் பெருங்கடல் எவற்றைக் கொண்டுள்ளது?

அ. பால்டிக் கடல்
ஆ. கரீபியன் கடல்
இ. கருங்கடல்
ஈ. இவை அனைத்தையுமே
36. வளிமண்டல அடுக்குகளில் எது நமக்கு அண்மையில் உள்ளது?

அ. டிரபோஸ்பியர்
ஆ. ஸ்ட்ராடோஸ்பியர்
இ. மெஸோஸ்பியர்
ஈ. அயனோஸ்பியர்
37. உலகில் அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

அ. சீனா
ஆ. இந்தியா
இ. தாய்லாந்து
ஈ. அமெரிக்கா
38. உலகில் அரிசி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

அ. சீனா
ஆ. இந்தியா
இ. தாய்லாந்து
ஈ. இலங்கை
39. ஜூட், காபி, கரும்பு, வாழைப்பழம், ஆரஞ்சு, பஞ்சு ஆகியவற்றை பணப் பயிர்கள் என கூறுவது எதனால்?

அ. இவற்றை விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்பதால்
ஆ. குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் தருவன என்பதால்
இ. விற்பனைக்காக வளர்க்கப்படுவதால்
ஈ. உற்பத்தியாளர்களின் சொந்த உபயோகத்திற்காக இவை வளர்க்கப்படுவதால்
40. ஸ்ரீரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், சிவசமுத்திரம் ஆகியவை எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

அ. கிருஷ்ணா
ஆ. காவேரி
இ. வைகை
ஈ. கங்கை

விடை: 31. ஈ 32. இ 33. இ 34. இ 35. ஈ 36. அ 37. அ 38. ஆ 39. இ 40. ஆ

No comments:

Post a Comment