Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

புவியியல் - 8

71. ஏலகிரி மலை கீழ்க்கண்ட எந்தத் தொடரில் அமைந்துள்ளது?

அ. மேற்கு தொடர்ச்சி மலை
ஆ. கிழக்கு குன்றுகள்
இ. இரண்டும் இணையும் இடத்தில்
ஈ. எதுவுமில்லை
72. கோடைக்காலத்தில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வீசும் தவக்காற்று

அ. லூ
ஆ. நார்வெஸ்டார்
இ. மாங்கோ ஷோவர்
ஈ. சுவாத்ரின்
73. இந்தியாவில் அதிகம் பழங்குடி மக்கள் வாழும் பகுதி

அ. இமயமலையின் வடகிழக்குப் பகுதி
ஆ. கங்கைச் சமவெளி
இ. சிந்து வடிநிலப்பகுதிகள்
ஈ. சம்பல் பள்ளத்தாக்கு
74. பாகிஸ்தானுடன் பொது எல்லை கோடுகள் கொண்ட மாநிலங்கள்

அ. குஜராத், அருணாச்சல பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர்
ஆ. குஜராத், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான்
இ. ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப்
ஈ. ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான்
75. கீழ்க்கண்ட மலைகளில் எது புவியியல் வரலாற்றின்படி மிகவும் பழமையானது

அ. நீலகிரி
ஆ. சாத்புரா மலைத்தொடர்
இ. விந்தியமலை
ஈ. ஆரவல்லி
76. பிரம்மபுத்ரா உற்பத்தியாகும் இடம்

அ. பிண்டாரி பனியாறு
ஆ. மானசரோவர் ஏரிக்கருகில் உள்ள பனியாறு
இ. திபெத்துக்கு அருகே
ஈ. நர்மதா
77. கங்கை சிந்து சமவெளியில் அகன்று இருப்பது

அ. கிழக்கில் இருந்து மேற்கே
ஆ. மேற்கில் இருந்து கிழக்கே
இ. இடையில்
ஈ. எங்குமில்லை
78. பிளவு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள நதியின் பெயர்?

அ. லூனி
ஆ. சாம்பல்
இ. சன்
ஈ. தபதி
79. வங்காள தேசத்தில் கங்கை நதி புகும்போது துவராகாவிற்கு அப்பால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ. பத்மா
ஆ. மேக்னா
இ. ஹூக்ளி
ஈ. சுவரன் கங்கை
80. தீபகற்ப இந்தியாவின் வடமேற்கு பகுதி

அ. தக்காண பீடபூமி
ஆ. மேற்கு தொடர்ச்சி மலை
இ. மாளவ பீடபூமி
ஈ. சோட்டா நாக்பூர் பீடபூமி

விடை: 71. ஆ 72. ஆ 73. அ 74. ஆ 75. ஈ 76. ஆ 77. அ 78. ஈ 79. அ 80. இ

No comments:

Post a Comment