Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

வரலாறு - 10

91. மயில் சிம்மாசனம் எந்த அரசருக்காக உருவாக்கப்பட்டது?

அ. ஹுமாயூன்
ஆ. ஷாஜகான்
இ. அக்பர்
ஈ. நாதிர் ஷா
92. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியது யார்?

அ. ரவீந்திர நாத் தாகூர்
ஆ. ராஜாராம் மோகன் ராய்
இ. சுவாமி தயானந்தர்
ஈ. கேசாப் சந்திர சென்
93. ஔரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு யார்?

அ. குரு அர்ஜுன் தேவ்
ஆ. குரு ஹர்கோவிந்த்
இ. குரு ஹர்கிஷன்
ஈ. குர் தேஜ் பகதூர்
94. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அலாவுதீன் கில்ஜி
ஆ. ஷெர்ஷா சூரி
இ. பாபர்
ஈ. அக்பர்
95. அக்பரின் அவையிலிருந்த நவரத்தினங்களில் இந்தி கவிஞர் யார்?

அ. அபுல் பாசல்
ஆ. பைசி
இ. அப்பாஸ் கான் ஷெர்வானி
ஈ. பீர்பால்
96. பதவிக்கு வரும் போது அக்பரின் வயது என்ன?

அ. 11 வயது
ஆ. 14 வயது
இ. 12 வயது
ஈ. 17 வயது
97. அக்பருக்கு குழந்தை பாக்கியத்தை அருளியவர் என நம்பப்படுகிற, பதேபூர் சிக்ரியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சூபி துறவி யார்?

அ. ஷேக் பக்ரித்
ஆ. நிஜாமுதீன் அவுலியா
இ. சலிம் சிஸ்டி
ஈ. ஷேக் பக்டியார் காக்கி
98. தற்போது ஹம்பி என அழைக்கப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?

அ. கிருஷ்ணா
ஆ. காவேரி
இ. துங்கபத்ரா
ஈ. கோதாவரி
99. விஜயநகரப் பேரரசை நிறுவியவர் யார்?

அ. இரண்டாம் ஹரிஹரர்
ஆ. விஜய ராயர்
இ. இரண்டாம் புக்கர்
ஈ. ஹரிஹரர், புக்கர்
100. தன்னை காலிப் என அழைத்துக் கொண்ட ஒரே சுல்தான் யார்?

அ. அலாவுதீன் கில்ஜி
ஆ. முபாரக் ஷா கில்ஜி
இ. குஸ்ரு ஷா
ஈ. முகமது பின் துக்ளக்

விடை: 91. ஆ 92. இ 93. ஈ 94. ஈ 95. ஆ 96. ஆ 97. இ 98. இ 99. ஈ 100. ஆ

No comments:

Post a Comment