Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

வரலாறு - 9

81. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?

அ. சென்னப்பட்டினம்
ஆ. காஞ்சிபுரம்
இ. மதுரை
ஈ. மகாபலிபுரம்
82. களப்பிரர்களின் காலம் எது?

அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு
ஆ. 3 - 6ம் நூற்றாண்டு
இ. 5 - 8ம் நூற்றாண்டு
ஈ. இவை எதுவுமில்லை
83. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்?

அ. அஜாத சத்ரு
ஆ. பிம்பிசாரர்
இ. நந்திவர்த்தனர்
ஈ. அசோகர்
84. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?

அ. பல்லவர்கள்
ஆ. சோழர்கள்
இ. குப்தர்கள்
ஈ. முகலாயர்கள்
85. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?

அ. 14
ஆ. 13
இ. 15
ஈ. 12
86. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?

அ. துருக்கியர்
ஆ. அரேபியர்
இ. பதானியர்
ஈ. ஆப்கானியர்
87. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு

அ. 1326
ஆ. 1349
இ. 1372
ஈ. 1398
88. 'அல்பரூனி' யாருடன் இந்தியா வந்தார்

அ. முகமது கஜினி
ஆ. முகமது கோரி
இ. முகமது பின் காசிம்
ஈ. தைமூர்
89. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை

அ. கன்னோசி - பிரதிகாரர்கள்
ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள்
இ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட்
ஈ. பாளர்கள் - டெல்லி
90. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்

அ. முதலாம் ராஜராஜன்
ஆ. முதலாம் குலோத்துங்கன்
இ. முதலாம் ராஜேந்திரன்
ஈ. இரண்டாம் ராஜராஜன்

விடை: 81. ஆ 82. ஆ 83. ஆ 84. ஆ 85. ஆ 86. அ 87. ஈ 88. அ 89. ஈ 90. ஆ

No comments:

Post a Comment