Popular Posts

Wednesday 7 March 2012

general knowledge

வரலாறு - 15

141. ஹரப்பா மக்கள் கீழ்க்கண்ட எந்த நாட்டினரோடு வாணிபத் தொடர்பு வைத்திருக்கவில்லை?

அ. ஈரான்
ஆ. மெசபடோமியா
இ. ரோம்
ஈ. ஆப்கானிஸ்தான்
142. சிந்து சமவெளி நாகரீகத்தின் வீட்டு உபயோகப் பொருட்கள் எதில் செய்யப்பட்டவை?

அ. கற்கள்
ஆ. டெர்ரகோட்டா
இ. வெண்கலம்
ஈ. செம்பு
143. ஹரப்பா மண் பாண்டங்கள் பொதுவாக எந்த நிறத்தைக் கொண்டிருந்தன?

அ. மஞ்சள்
ஆ. ஊதா பச்சை
இ. கருஞ்சிவப்பு
ஈ. இளஞ்சிவப்புடன் கூடிய மஞ்சள்
144. வேத வழிபாட்டு நூல்

அ. ரிக் வேதம்
ஆ. சாம வேதம்
இ. யஜூர் வேதம்
ஈ. அதர்வண வேதம்
145. மகாவீரர் பிறந்த இடம்

அ. லும்பினி
ஆ. கயா
இ. குந்தகிராமம்
ஈ. லிச்சாவி
146. ரிக் வேதத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை

அ. 1024
ஆ. 1028
இ. 1032
ஈ. 1036
147. சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்

அ. கூன்பாண்டியன்
ஆ. சடாவர்ம சுந்தரப் பாண்டியன்
இ. விஜயாலய சோழன்
ஈ. சேரன் இளஞ்சேரலாதன்
148. புத்த மற்றும் சமண சமயங்கள் தோன்ற காரணமான சூழல் எது?

அ. சமய இலக்கியங்கள் புரியாத சமஸ்கிருதத்தில் இருந்தன
ஆ. சடங்குகள் மற்றும் வேள்விகள்
இ. சாதிமுறை கடுமையாக இருந்தன
ஈ. இவை அனைத்தும்
149. கீழ்க்கண்ட யார் புத்த மதத்தின் கடும் எதிரி?

அ. கனிஷ்கர்
ஆ. ஹர்ஷர்
இ. அஜாத சத்ரு
ஈ. புஷ்ய மித்ர சுங்கன்
150. நான்காவது புத்த மத மாநாட்டை கூட்டியவர்

அ. அசோகர்
ஆ. கனிஷ்கர்
இ. ஹர்ஷர்
ஈ. விக்ரமாதித்யர்

விடை: 141. இ 142. ஆ 143. ஈ 144. இ 145. இ 146. ஆ 147. அ 148. ஈ 149. ஈ 150. ஆ

No comments:

Post a Comment